உலகம் முழுவதும் பல்வேறு விதமான சாதனைகளைப் புரிந்து கின்னஸ் புத்தகத்தில்  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இடம்பெறும்  நிலையில் சிலர் வித்தியாசமான சாதனைகளையும் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறார்கள். அந்த வகையில் ஒரு வாலிபர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அதாவது கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாகீர் (29). இவர் ஒரு வனவியல் ஆர்வலர்.

இவர் தற்போது ஒரு மணி நேரத்தில் 1123 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்கும் விதத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் அவருடைய சாதனையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.