பிரபலமான ஓடிடி இயங்குதளம் Netflix  தன்னுடைய பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான  செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது நெட்பிளிக்ஸ் அதன் சந்தா கட்டணத்தை குறைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட மொத்தம் 115 நாடுகளில் கட்டணத்தை குறைத்துள்ளது. மொபைலில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த  திட்டத்தின் விலை ரூ.199-ல் இருந்து ரூ.149 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கணினி மற்றும் டிவி தவிர எங்கு வேண்டுமானாலும் அணுகக்கூடிய திட்ட கட்டணம் ரூ.499-ல் இருந்து ரூ.199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 2023-இல் முடிவடைந்த காலாண்டில் நெட்பிளிக்ஸின் உலகளாவிய நிகர வருமானம் சுமார் 18 சதவீதம் குறைந்து 1,305 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.