தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழக முதலமைச்சர் திருமகன் மு க ஸ்டாலின் உடைய 70-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், நண்பர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய செயலாளர் ஜீவன் பிரசாந்த் அவர்கள், திருநாவுக்கரசு அவர்கள் மற்றும் காங்கிரஸ் கமிட்டி தோழர்கள், நாங்கள் அனைவரும் அவரை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தோம்.

தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நல்லாட்சியை வழங்கி வரும் முதல்வர் இந்தியாவில் நம்பர் ஒன் அமைச்சர் என பெயர் எடுத்து தமிழ்நாட்டுக்கு பெயர் சேர்த்த முதல்வர். தமிழர்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நிற்பதற்கு உருவாகி இருக்கிற உன்னதமான ஆட்சியை கடந்த 20 மாதங்களில் வழங்கி இருக்கும் முதல்வர். அவரை வாழ்த்துவது தாங்கள் பெருமைப்படுகிறோம். காங்கிரஸ் பெருமை படுகிறது.

இந்தியாவில் இந்திய தேசத்தின் உடைய பிரதமராக வரவேண்டும் என்று முதல் முதலாக கோரிக்கை வைத்த முதல் அமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களை வரும் 2024-ல் மிக முக்கியமான பணியை ஆற்றி இந்தியாவை காங்கிரஸ் தலைமையில் நல்லாட்சி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க நம்முடைய முதல்வருக்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவருக்கு எங்களுடைய நல்வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறோம். அவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் சமுதாயத்திற்கும் இந்தியாவிற்கும் உழைக்க வேண்டும். தலைவர் கருணாநிதி போல பல்லாண்டு வாழ்க. தமிழ் சமுதாயத்தை முன்னேற உழைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் என்ன பேசி உள்ளார்.