சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு ரயிலின் கதவருகே ஒரு இளைஞர் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.

ரயில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, பிளாட்பாரத்தில் இறங்கிவிடலாம் என அந்த இளைஞர் முயன்றதாகத் தெரிகிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அவரது கைப் பிடி நழுவியது.

நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த இளைஞர், ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் இருந்த இடைவெளியில் விழுந்து ரயிலுக்கு அடியிலேயே சிக்கிக் கொண்டார்.

இந்த விபத்து நடந்த விதம் மிகவும் கொடூரமாக இருந்ததால், பார்ப்பவர்களையே நிலைகுலையச் செய்துள்ளது. அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “ரயில் போனால் அடுத்த ரயில் வரும், ஆனால் உயிர் போனால் திரும்பாது” என வேதனையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். “இது தற்கொலைக்குச் சமமான செயல்” என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.