உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில், மதிய உணவிற்குப் பிறகு மாணவர்கள் வரிசையில் நின்று தங்களது தட்டுகளைத் தாங்களே கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கல்வி கற்க வேண்டிய வயதில், பிஞ்சுப் பிஞ்சுக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில் உள்ள குழாயடியில் அமர்ந்து பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“>

இந்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பாகும்; ஆனால், மாணவர்களை இது போன்ற பணிகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இத்தகைய அலட்சியப்போக்கு எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.