ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டங்கன் மெக்நாட் (Duncan McNaught) என்ற சுற்றுலாப் பயணி, தற்போது இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகிறார். அவர் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற எல்லோரா குகைகளுக்குச் சென்றபோது இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்த டங்கன், திடீரென ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட்டார். உடனே அங்கிருந்த இந்திய சுற்றுலாப் பயணிகளும் அவருடன் சேர்ந்து உற்சாகமாக முழக்கமிட்டனர்.
View this post on Instagram
தொடர்ச்சியாக அவர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொல்ல, ஒட்டுமொத்த இடமும் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தது. இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் “இந்த வெள்ளைக்காரர் ஆதார் கார்டு வாங்கத் தயாராகிவிட்டார்” என்ற வாசகத்தையும் அவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த இந்திய நெட்டிசன்கள், “உங்களது ஆதார் கார்டு வெரிஃபிகேஷன் வெற்றிகரமாக முடிந்தது” என்றும், “இந்தியாவின் உண்மையான தூதுவர் நீங்கள்தான்” என்றும் அன்பைப் பொழிந்து வருகின்றனர்.
