மொபைல் போன் மாற்றும்போது பழைய சிம் கார்டு மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை நாம் குப்பை எனத் தூக்கி எறிவது வழக்கம். ஆனால், ஒரு பிளாக்கர் (Blogger) ஆயிரக்கணக்கான பழைய சிம் கார்டுகளைச் சேகரித்து, அதிலிருந்து தங்கம் எடுத்ததாகக் கூறி ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

தான் சேகரித்த பழைய சிம் கார்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளைச் சுத்திகரித்ததன் மூலம் 191.73 கிராம் சுத்தமான தங்கம் கிடைத்ததாக அவர் உரிமை கோரியுள்ளார். இதன் மதிப்பு இந்தியச் சந்தையில் சுமார் ரூ.31 லட்சம் எனச் சொல்லப்படுகிறது.

இந்தத் தங்கத்தைப் பிரித்தெடுக்க ஆசிட், ரசாயனங்கள் மற்றும் மின்சாரம் போன்ற மிகவும் ஆபத்தான வழிமுறைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். சிம் கார்டுகளைச் சிறு துண்டுகளாக உடைத்து ரசாயனக் கலவையில் போட்டுத் தங்கத்தைப் பிரித்தெடுத்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நிபுணர்கள் ஒரு முக்கியமான உண்மையை உடைத்துள்ளனர். ஒரு சாதாரண சிம் கார்டில் மிக மிகக் குறைந்த அளவே தங்கம் இருக்கும். 191 கிராம் தங்கம் எடுக்க வேண்டுமென்றால் சுமார் 4 லட்சம் சிம் கார்டுகள் தேவைப்படுமாம்.