சென்னையில் பிரபலம் வாய்ந்த அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு அனுமதி கிடையாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் தான் அரசியல், பிசினஸ், ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்களை பேசுவார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட விஷயங்களை பேசும்போது ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியை பற்றி இழிவாக பேசினால் அந்தக் கட்சியை சேர்ந்த மற்றொரு நபர் அங்கு இருக்கும் போது கண்டிப்பாக பிரச்சினை ஏற்படும். இதேபோன்று மற்ற விஷயங்களைப் பற்றி பேசும்போது வாடிக்கையாளர்களுக்கு இடையே பிரச்சனைகள் வரலாம். மேலும் இதனால் தான் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு அனுமதி கிடையாது என அந்த ஹோட்டலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தொடர்பான புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.