இந்தியாவில் அதிவேக இணையதள சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. ஜியோ நிறுவனம் அடிக்கடி புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 11 மாதங்களுக்கான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 895 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 336 நாட்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டாவை பெறுவீர்கள். இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும் 12 சுழற்சிகளில் திட்டம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் மொத்தம் 24 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை நீங்கள் வாங்கும் போது 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.