உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டர் நிறுவனத்தில் 7500 ஊழியர்கள் இருந்த நிலையில், அதன் எண்ணிக்கை 1500 ஆக குறைந்தது. அதன்பிறகு ப்ளு டிக் வசதியை யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பை மஸ்க் வெளியிட்டுள்ளார். அதாவது ட்விட்டரில் உள்ள செய்தி நிறுவனங்கள் பயனர்கள் படிக்கும் செய்திகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

அதன்படி ஒரு செய்தியை படிப்பதற்கு செய்தி நிறுவனங்கள் விரும்பும் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். இதற்கு மாத சந்தா கட்டும் வசதியும் அமல்படுத்தப்பட இருக்கிறது‌. மாத சந்தா கட்டி செய்தி படிப்பவர்களுக்கு கட்டணம் குறையும் என்றும் என்றாவது ஒருநாள் செய்தி படிப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மஸ்கின் இந்த அறிவிப்பால்  செய்தி நிறுவனங்களுக்கு வருமானம் வந்தாலும் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.