உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் செயலி side by side என்ற புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி இந்த அம்சத்தின் மூலமாக ஏற்கனவே உள்ள சாட்டிலிருந்து வெளியேறாமல் மற்றொரு சாட்டை தொடங்க அனுமதிக்கும். இதனால் நமது உரையாடல்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர முடியும். தேவைப்பட்டால் அந்த அமைப்பை நிறுத்திக் கொள்ளவும் முடியும். side by side அமைப்பை பெறுவதற்கு பயனர்கள் whatsapp settings சென்று chats என்பதை தேர்வு செய்ய வேண்டும்.