உலக அளவில் பிரபலமான ஓடிடி தளமாக அமேசான் பிரைம் இருக்கிறது. மிகப்பெரிய ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் பல்வேறு இடங்களில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் சப்ஸ்கிரிப்ஷனை அளித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் ப்ரைமுக்கான சந்தா கட்டணத்தையும் அடிக்கடி மாற்றுவது. இந்நிலையில் அமேசான் பிரைம் சமீப காலமாக சந்தா கட்டணத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெறுவதற்கான ஆரம்ப கட்டணம் 299 ரூபாயாக இருக்கிறது. இதற்கு முன்னர் 129 ரூபாயாக இருந்தது.
3 மாதங்களுக்கான அமேசான் ப்ரைம் சப்ஸ்கிரிப்ஷனுக்கான கட்டணம் 459 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 599 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விலை அதிகரிக்கப்பட்டாலும் நீண்ட காலத்திற்கான மெம்பர்ஷிப் கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி அமேசான் பிரைம் ஒரு வருடத்திற்கான சந்தா கட்டணம் 1499 ரூபாய் ஆகவும், ஒரு வருடத்திற்கான பிரைம் லைட் பிளானிர்க்கான கட்டணம் 999 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் அமேசான் பிரைமை மெம்பர்ஷிப் கட்டணம் செலுத்து பெறுபவர்களுக்கு பிரைம் சந்தாதாரராக இல்லாதவரை விட அதிவேக டெலிவரி வழங்கப்படும். இவற்றை தவிர்த்து பிரைம் வீடியோ மற்றும் ப்ரைம் மியூஸிக் போன்றவற்றிற்கான உரிமமும் வழங்கப்படுகிறது.