இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அதன்படி SPAMகால்களால் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதால் தற்போது தொலைபேசி அழைப்புகள் மற்றும் எம் எம் எஸ் சேவைகளில் AI ஸ்பேம் ஃபில்டர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு போலி மற்றும் விளம்பர அழைப்புகளை தவிர்க்க உதவும். தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை AI பில்டர் சேவையை விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.