உலக அளவில் facebook, whatsapp, இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் போன்று பிரபலமான செயலியாக டெலிகிராம் இருக்கிறது. telegram தற்போது தன்னுடைய பயனர்களுக்கு புது அப்டேட்டுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சேட் போல்டர்கள் முழுவதும் லிங்க் மூலம் பகிரும் வசதி, தனிப்பட்ட சேட்களை தனி பயனாக்கிக் கொள்ளக்கூடிய வால்பேப்பர்களை உருவாக்குதல், சேட்டில் இணைய செயலிகளை பயன்படுத்துதல் போன்ற வசதிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.
இதில் சேட் போல்டர்கள் வசதியில் லிங்கை பயன்படுத்தி பயனர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சேட் போல்டர்களை பகிரலாம். அதன் பிறகு குறிப்பிட்ட சில சேட்களுக்கு நீங்கள் தனி பயனாக்கப்பட்ட வால்பேப்பர்களை அமைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த புகைப்படங்களை அமைத்து உங்களுடைய சேட்டை தனி பயனாக்கிக் கொள்ளலாம். மேலும் telegran இல் சேட் செய்யும்போது கூடுதலாக இணைய செயலிகளை தடையின்றி தொடங்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.