உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயனாளர்களுக்கு ஒரு புது வசதியை கொண்டுவந்துள்ளது வாட்ஸ்ஆப்.

அதாவது ஸ்மார்ட்போன்களை மாற்றும்போது உங்கள் வாட்ஸ்அப் சாட்களை பேக்அப் எடுக்காமல், அப்படியே மாற்றிக்கொள்ளும் வகையில் புதிய அப்டேட் வர உள்ளது. முன்னதாக, சாட் பேக்அப்பை நீங்கள் கூகுள் டிரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், புதிய அப்டேட்டில் அப்படி செய்ய தேவையில்லை. அதன்படி, உங்கள் புதிய போனின் வாட்ஸ்அப்பில் உள்ள Transfer Chat History என்ற ஆப்ஷன் மூலம், QR கோடு வழியே சாட்களை மாற்றிக்கொள்ளலாம்.