நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது முதல் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் போது அளித்து வரும் பேட்டிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பம் பற்றியும், தந்தை விஜய் பற்றியும் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு அவர் வெளிப்படையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

தனது தந்தையின் வெற்றி குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், “அப்பாவின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி எங்க குடும்பத்துக்கே பெரிய பெருமை. நானும், அம்மாவும், தங்கச்சியும் ரொம்ப சந்தோஷப்படுறோம். மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பைப் பார்க்கும் போது, நமக்கும் பெரிய பொறுப்பு இருப்பதாக உணர்கிறோம்” என்று கூறியுள்ளார். இதன் மூலம் விஜய் குடும்பத்தை கவனிக்கவில்லை, பிள்ளைகளுடன் நெருக்கம் இல்லை எனப் பரப்பப்பட்ட கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சினிமாவில் தனது அறிமுகம் குறித்துப் பேசிய அவர், தந்தையைக் காப்பி அடிக்கவோ அல்லது அவரை விட பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காகவோ தான் சினிமாவிற்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார். தனக்கு சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் மட்டுமே இயக்கம் பக்கம் வந்திருப்பதாகவும், தந்தை தனக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஊக்குவிப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மகன் வாய் திறந்தால் வதந்திகள் உண்மை எனத் தெரியவரும் என்று காத்திருந்த எதிரத்தரப்பினருக்கு, ஜேசன் சஞ்சய்யின் இந்த நேர்மறையான பேட்டி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தந்தையைப் பற்றி பெருமையாகவும், பொறுப்பாகவும் பேசியுள்ள சஞ்சய்யின் இந்த வீடியோக்களை விஜய் ரசிகர்களும் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.