ஆரம்பத்தில் சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானவர் கவின். இவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு நாயகனாக என்ட்ரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றார். இதைபின் இவர் நடிப்பில் ரிலீசான லிஃப்ட் திரைப்படம் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்றது. தற்போது டாடா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் பாக்கியராஜ், அபர்ணா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார்கள். இப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் கவினுக்கு டாடா படம் அடுத்த கட்டத்திற்கு கூட்டிச் சென்றுள்ளது. அட உண்மை தாங்க.

கவின் அடுத்ததாக கமலின் ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தை பார்த்துவிட்டு கமல் பாராட்டி இருந்தார். இந்த நிலையில் கமல் தயாரிக்கும் திரைப்படத்தில் கவினை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு வரும்வரை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.