தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் பூர்ணா. இத்திரைப்படத்தை தொடர்ந்து தகராறு, கொடிவீரன், கந்தகோட்டை, துரோகி என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் அண்மையில் தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இத்தம்பதியினருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அண்மையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த நிலையில் வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் போட்டோ சூட் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கின்றார். இதற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றது.