பாலிவுட் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் நடிப்பில் சென்ற மாதம் 25ஆம் தேதி பதான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து படம் ரிலீஸ் ஆகி தற்போது சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

பாலிவுட் திரையுலகம் அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது பதான் திரைப்படம் காப்பாற்றி உள்ளது என திரை வட்டாரங்கள் இடையே பேசப்பட்டு வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி இந்தியாவில் மட்டும் 500 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இந்தி சினிமா உலகில் நேரடியாக 500 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாக பதான் படம் விளங்குகிறது குறிப்பிடத்தக்கது.