செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்,  ஓபிஎஸ் என்கின்ற மூத்தவர்…. எத்தனை இடைத்தேர்தல் வந்தது….. அண்ணன் ஓபிஎஸ் கிட்ட தான் அம்மா பொறுப்பை ஒப்படைப்பாங்க… எங்கே போனார் எடப்பாடி ? அத்தனை இடைத்தேர்தல் பொறுப்பும் அண்ணன்  ஓபிஎஸ் இடம் ஒப்படைக்கப்படும். விழிகாட்டும் திசைகளெல்லாம்  வெற்றிகளை கொண்டு வந்து குவித்தார், விரல் காட்டும் திசைகளெல்லாம் அண்ணா திமுகவுக்கு வாய்ப்புகள் உருவாக்கி கொடுத்தவர் அண்ணன் ஓபிஎஸ்.

என்றைக்குமே கடந்த காலங்களை பார்த்துக் கொண்டுதான் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும். கடந்த காலத்தில் புரட்சி தலைவி அம்மா நம்பியது அன்னான் ஓபிஎஸ் ஒருவரை தான். அவரை தான் 3 முறையும் நம்பி தன மூடி சூட்டியிருந்த பதவியை கொடுத்தார்….  அப்படிப்பட்ட ஒரு மகத்தான மனிதரை திமுகவின் ஆள் என்று நீங்க எப்படி சொல்றீங்க ? திராவிட முன்னேற்றக் கழகத்தோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நீதிமன்றங்களிலே தலைதப்புமா ? என தவம் கிடக்கும் எடப்பாடி தான்,  திமுகவின் தயவில்  வாழ வேண்டிய பிராணி..

நீதிமன்றத்தை மதிக்கிறார். நீதிமன்றம் இப்படி சொல்லி இருக்கா ?  எனக்கான சத்தியம்… எனக்கான தீர்ப்பு… எங்கோ ஒரு நீதி அரசர்  காதிகளிலே அண்ணா திமுக தொண்டரில் உரிமை கேட்கும்….  ஏதோ ஒரு நீதி தேவதைக்கு கண்ணன் சரியாக தெரியும்….  அப்படின்னு  ஓபிஎஸ் நம்புறாரு. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. தொண்டனே  ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்தார்.