தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரையும், செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  11ஆம் வகுப்பு மார்ச் 4 முதல் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 11 , 12 ஆம் வகுப்புகளுக்கான பாட வாரியாக அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி மாணவர்கள் வருகை பதிவேட்டிற்கு இரண்டு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். 80 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்திருந்தால் 2% மதிப்பெண்ணும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வருகை புரிந்திருந்தால் ஒரு மதிப்பெண்ணும்  வழங்க வேண்டும்.

இந்த மதிப்பெண்கள் அனைத்தும் பாடங்களுக்கும் பொதுவானது. மேலும் உள்நிலை தேர்வுகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  40 முதல் 45 நிமிடங்கள் வரை உள்நிலை தேர்வு நடைபெறும். வகுப்பு நேரங்களில் அல்லது சிறப்பு வகுப்பு நேரங்களில் நடத்தப்படும். அடுத்ததாக கல்விஇணை செயல்பாடுகளுக்கு அதிகபட்சமாக இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். அதாவது இதற்காக வழங்கப்பட்டுள்ள பட்டியலில் ஏதேனும் மூன்று செயல்பாடுகளை பங்கேற்ற மாணவர்களுக்கு அதிகபட்சமாக இந்த மதிப்பெண்ணை வழங்கலாம். அந்த பட்டியலை எடுத்து பார்த்தால் மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம், கணித மன்றம், இயற்பியல் மன்றம், வேதியல் மன்றம், சாரண சாரணியர் இயக்கம் போன்றவை உள்ளது.