சேலம் மாவட்டம் அழகாபுரத்தில் சசிசேகர்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தர்மபுரியில் உள்ள தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளர் ஆக வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்பாக சேலத்தில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய திருமணமாகாத இளம் பெண் ஒருவருடன் சசி சேகர் பழகி அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகிய 10 நாளில் அந்தப் பெண் கர்ப்பமாகி உள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அப்பெண் 2 மாதம் கற்பனையாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் திருமணமாகி பத்து நாளில் எப்படி இரண்டு மாதம் கர்ப்பமாக முடியவில்லை என்று மனைவியிடம் கேட்டார்.
அப்போது அந்தப் பெண் நடந்த விஷயத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து கருவை கலைக்க முடிவு செய்த புது மாப்பிள்ளை சசி சேகரை தேடி தனது நண்பருடன் சென்றுள்ளார். இதையடுத்து சசிசேகரை பார்த்த இரண்டு பேரும் கருவை கலைக்க ரூபாய் 80,000 பணம் கேட்டுள்ளனர். கொடுக்காவிட்டால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடவும் என்றும் கூறியுள்ளனர். இதனால் பயந்து போன சசி சேகர் உடனடியாக கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து புது மாப்பிள்ளை தனது மனைவியை மருத்துவமனை அழைத்துச் சென்று கருவை கலைத்து உள்ளார். அதன் பின் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து புது மாப்பிள்ளை, கோபால், பிரபல ரவுடிகளுடன் சென்று மீண்டும் சசிசேகரை மிரட்டி 10 லட்சம் ரூபாய்க்கு கேட்டு உள்ளனர். அதன்படி அவர் ரூபாய் ஒன்பது லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய கும்பல் அவரிடம் தொடர்ந்து பணம் பறிக்க முடிவு செய்தனர். இதனால் பயந்து போன சசிசேகர் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கும்பலை தேடி வருகின்றனர்.
