தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை  சேர்ந்தவர் விக்னேஷ்(19). இவர் சிவகாசியில் உள்ள பேப்பர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விக்னேஷ் வேலைக்கு தவறாமல் சென்று விடுவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் அவரது பெற்றோர்கள் ஏன் என்று கேட்டுள்ளனர். அதற்கு விக்னேஷ் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். நேற்று விக்னேஷின் அம்மா வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது வீட்டின் உள்பக்கம் பூட்டியிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விக்னேஷின் தாயார் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார்.

அப்போது விக்னேஷ் மின்விசையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விக்னேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.