காட்டு விலங்குகளிலேயே மிகவும் பலம் வாய்ந்த யானையைக் கண்டால் சிங்கம் கூட வழிவிடும். ஆனால், ஒரு சிறிய விலங்கு யானையை மிரட்டி ஓட வைத்திருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? “உலகின் மிகவும் அச்சமற்ற விலங்கு” என்று அழைக்கப்படும் ‘ஹனி பேட்ஜர்’ (Honey Badger) தான் அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பிரம்மாண்ட யானையை நோக்கிச் சீறிப் பாய்ந்த ஒரு குட்டி ஹனி பேட்ஜர், அதைத் தனது ஆக்ரோஷமான அசைவுகளால் மிரட்டிப் பின்வாங்கச் செய்தது.
Honey badger is an adrenaline junkie! pic.twitter.com/yI1qAie06B
— The Figen (@TheFigen_) December 20, 2025
அந்த வீடியோவில், யானை முதலில் பயந்து ஓடினாலும், பிறகு மீண்டும் வந்து அந்தச் சிறிய விலங்கை மிரட்டப் பார்த்தது. ஆனால், எதற்கும் அஞ்சாத ஹனி பேட்ஜர், சளைக்காமல் யானைக்கே சவால் விட்டது.
ஒரு நிமிடம் 33 நொடிகள் ஓடும் இந்த வியக்கத்தக்க வீடியோவை இதுவரை 1.80 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரசித்துப் பார்த்துள்ளனர். “உடல் உருவம் முக்கியமல்ல, மன தைரியம்தான் ஒருவரை வெற்றியாளராக மாற்றும்” என இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
