முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தூய்மை பணியாளர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியது தொடர்பாக தமிழிசையிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் விஜய் நேரில் வந்தால் கூட்டம் வந்து விடும் என்றால் எதற்காக அரசியல் கட்சி.

இது என்ன Pattern என்று புரியவில்லை. சினிமாவை வீட்டில் பார்த்தால் கோபம் வருகிறது. ஆனால் இவர்களை வீட்டில் போய் பார்க்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆணவ கொலைக்கு எதிராக அவர் குரல் கொடுக்காததால் கடும் கண்டனத்தையும் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து கொஞ்சம் கொஞ்சம் தூக்கத்திலிருந்து எழுந்து ஏதாவது சொல்லட்டும் பெரிதாக வலிமையாக சொல்லட்டும் அதன் பிறகு பார்க்கலாம். அன்றாட பிரச்சினை எவ்வளவு ஓடிக்கொண்டு உள்ளது. அதனையும் விஜய் பார்த்தால் பரவாயில்லை. அரசியல் கட்சித் தலைவராக இருந்து அவர் கொஞ்சம் பார்க்க வேண்டும். சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம்.

மக்கள் பிரச்சனையை தினம் தினம் பேச வேண்டும். ஆணவக் கொலை நடந்தது வாய் திறந்தாரா திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் ஆணவ கொலை ஆட்சியாளர்கள் தான் காரணம் என்று தெரிவித்தனர். ஆனால் தற்போது மாற்றிப் பேசுகிறார்கள். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் சீட்டுக்காக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது என்று விமர்சித்தார்.