அரியலூரில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொது மக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க காவல்துறையினர் தகுந்த உத்தரவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுமதிக்கப்பட்ட மதுபான கூட்டத்தில் தான் மது பிரியர்கள் மது அருந்த வேண்டும். பொது இடங்களில் யாராவது மது அருந்தினால் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் மது அருந்துவோரினால் பாதிக்கப்படும் மக்கள் எளிதில் புகார் தெரிவிக்க வசதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர்கள் தங்களது செல்போன் எண், ஈமெயில், வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரிகள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையை டிஜிபி எடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
