தமிழ்நாடு அரசு அனைத்து மக்களுக்கும் நல திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு தாயுமானவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் எளிய குடும்பங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்பதே.
தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்க்கே சென்ற ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்க்கே சென்ற ரேஷன் பொருட்களை கொடுப்பதால் அரசுக்கு 30.16 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாதம்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 16, 73, 333 குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக சென்ற ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
