நாகாலாந்து மாநில கவர்னர் இல. கணேசன், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.
குடும்பத்தினர் அவரை உடனடியாக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை மீது மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகின்றனர்.
