மகாராஷ்டிரா மாநிலம் ஹெத் மலைப்பகுதியில் கேஷ்திர மகாதேவ் குண்டேஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் 40 பக்தர்கள் ஒரு மினி சரக்கு லாரியில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.
அப்போது அந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 8 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
