நடிகை மீரா மிதுன் மன அழுத்தம் காரணமாக டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்கள் மீது அவதூறு பேசியதாக மீரா மிதுன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 3 ஆண்டுகள் மீரா மிதுன் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மீரா மிதுனை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சென்னை குற்றவியல் போலீசார் மன அழுத்தம் காரணமாக நடிகை மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
