பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதி திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் பல லட்சம் பேர் வந்து செல்லும் பொது இடத்தில் தூய்மை பணியாளர்களின் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசுக்கு நெருக்கடி உருவாக்கி வருகிறது. இதனால் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு சற்று முன் அழைப்பு விடுத்தது. ஆனால் அதை புறக்கணித்த தூய்மை பணியாளர்கள் ஸ்ட்ரைக்கை தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

அதாவது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. பனி பாதுகாப்பு பண பலன்களை சென்னை மாநகராட்சி 100 சதவீதம் உறுதி செய்யும் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இருப்பினும் இதனை புறக்கணித்த தூய்மை பணியாளர்கள் ஸ்ட்ரைக் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.