தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் மட்டுமே ஒரே ஒரு பிரபலமாக கலந்து கொள்ளும் நிலையில் போலீசாரின் 43 கேள்விகளுக்கும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பதில் வழங்கப்பட்டதால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் அது தொடர்பாக ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற கருத்தினை முன்வைத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது.
எனவே மாநிலம் அதிர மாநாட்டுக்கு தயாராகுவோம். நாம் மாற்று சக்தி அல்ல முதன்மை சக்தி என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துவோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மதுரை மாநாட்டில் கொள்கை எதிரி மற்றும் அரசியல் எதிரியை சமரசம் இன்றி எதிர்ப்போம் என்றும தெரிவித்துள்ளார்.
