மண்ணை தோண்டும் போது பிளாஸ்டிக் மூடிகள், பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கிடைப்பது சாதாரணமான விஷயம் தான். ஏனெனில் பிளாஸ்டிக் எதிலும் கரையாது, மண்ணிலும் வருஷம் கழித்தும் மாறாத நிலையிலேயே இருந்து விடுகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவைக் கண்டவர்கள் சோகமும், பயமும் கொண்டுள்ளனர்.
View this post on Instagram
வீடியோவில் ஒருவர், பல வருடங்களுக்குப் பிறகு நிலத்தை தோண்டியபோது பழைய பிளாஸ்டிக் பாக்கெட்டை கண்டுபிடித்ததாகக் கூறுகிறார். அதில் 1997-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ஜல்ஜீரா பாக்கெட் என்ற தகவலும் உள்ளது. அதாவது 28 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து இருந்தபோதும், அந்த பிளாஸ்டிக் பாக்கெட் சீராகவே இருப்பது போன்ற காட்சிகள் வீடியோவில் தெரிகின்றன. “இன்றைக்கும் இதில் எந்த மாற்றமும் இல்லை… பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள்” என்று அந்த நபர் கூறுகிறார்.
இந்த வீடியோ, devendersinghbana\_naturelover என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு, இதுவரை 25 லட்சத்திற்கு மேல் பார்வைகள் பெற்று, 75,000 பேர் லைக் செய்துள்ளனர். அதனை கண்ட நெட்டிசன்கள் வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
