கொல்கத்தாவின் புகழ்பெற்ற என்.ஆர்.எஸ் (NRS) மருத்துவக் கல்லூரியில் 2003-ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்தவர் சௌரவ் கோஷ். சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டியாக இருந்த இவர், ஒரு திறமையான கார்டியாக் சர்ஜனாக உருவெடுத்தார்.

சௌரவ் கோஷின் குடும்பமே அறிவாளிகளின் சங்கமம். ஆனால், விதி அவர்கள் அனைவரையும் மனநல பாதிப்பு என்ற பெயரில் வேட்டையாடியது. அவரும் ஒரு மருத்துவர்தான். ஆனால் மனநல பாதிப்பால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் முடித்தவர்.

அவரும் இதே மனநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். இறுதியில் தனது பெற்றோரை இழந்த சௌரவ், குடும்பத்தின் அடுத்தடுத்த மரணங்களால் நிலைகுலைந்து போனார்.

இன்று சௌரவ் கோஷ் ஒரு அழுக்கான அறையில், யாருமற்ற நிலையில் வசிக்கிறார். ஆனால், யாராவது பேனாவும் நோட்டும் கொடுத்தால், உடனே மருந்துகளின் பெயர்களை மளமளவென எழுதுகிறார்.

காய்ச்சல் என்றாலும் சரி, பெரிய அறுவை சிகிச்சை என்றாலும் சரி, எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்பதில் அவருக்குத் துளியும் குழப்பம் இல்லை.

அவர் எழுதும் சீட்டின் கீழே தனது மருத்துவப் பதிவு எண் (WBMC 60314) மற்றும் பட்டத்தைச் சரியாகக் குறிப்பிடுகிறார். அப்பகுதியில் உள்ள ஒரு காய்கறி வியாபாரிக்கு அவர் கொடுத்த மருந்தால், அந்த வியாபாரி குணமடைந்ததாகக் கூறுகிறார். அதேபோல், சாலையில் மயங்கி விழுந்த ஒருவருக்கு அவர் கொடுத்த முதலுதவி சிகிச்சை பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.