கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஜஸ்வித் கன்னட்கா (Jaswith Kannadka). குத்திகார் கிராமத்தைச் சேர்ந்த இவன், தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறான். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இவன் வர்ணனை செய்யும் வீடியோதான் இப்போது இணையத்தின் ஹாட் டாபிக்.

 

View this post on Instagram

 

A post shared by Thrishool Gowda (@imthrishool)

வீடியோவில் ஒரு சாதாரண மைதானத்தில் அமர்ந்து கொண்டு, கையில் மைக்கை பிடித்து ஜஸ்வித் வர்ணனை செய்கிறான். பந்து வீச்சாளர் ஓடி வரும்போது அமைதியாக இருப்பது, பந்து வீசப்பட்டதும் “Magnificent, Spectacular, Phenomenal” என ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி வர்ணனை செய்வது என ஒரு தேர்ந்த நிபுணரைப் போலவே செயல்படுகிறான்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 73 லட்சம்  பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. “கண்களை மூடிக்கொண்டு கேட்டால் இது ஒரு சிறுவன் என்று சொல்லவே முடியாது, ஹர்ஷா போக்ளே பேசுவது போலவே இருக்கிறது” என நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். ஆங்கிலம் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் ஜஸ்வித் வர்ணனை செய்து அசத்தி வருகிறான்.