திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ‘இளம் பெரியார்’ என்று குறிப்பிட்டது, தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்குக் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

“பெரியார் என்றால் உங்களுக்கு அவ்வளவு மழிவாகிவிட்டதா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பிய நாஞ்சில் சம்பத், “பெரியார் ஒரே நேரத்தில் 8 பதவிகளை ராஜினாமா செய்தவர்” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், “இவர்கள் பதவிக்காகவே உயிர்வாழ்கின்ற ஜென்மங்கள். உதயநிதியையெல்லாம் பெரியார் என்று சொல்லலாமா? அப்படிச் சொல்லியதால் இவர்கள் பெரியாரை இழிவுபடுத்தி இருக்கிறார்கள்” என்றும் அவர் கிண்டல் தொனியில் விமர்சித்துள்ளார்.