தமிழக வெற்றி கழகம் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது. புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசிய நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் போட்டியிடுவதை உறுதி செய்தார். புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம் தற்போது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வரும் நிலையில் அடுத்ததாக அவர் ஈரோட்டில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் திருச்செங்கோடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் போட்டியிடுவதாக நேற்று தகவல் வெளிவந்தது. இவர்தான் தமிழக வெற்றி கழகத்தின் முதல் வேட்பாளர் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் செய்திகள் வெளிவந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் தேர்தல் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடுவார் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் காரைக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த டாக்டர் பிரபு போட்டியிடுவதாக தற்போது அந்த கட்சியை நிர்வாகிகளே அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காரைக்குடி தொகுதியில் டாக்டர் பிரபு போட்டியிடுவதாக தன்னிச்சையாக தவெக நிர்வாகி அறிவித்துள்ளது அந்த கட்சியில் பரபரப்பாக பேசப்படுகிறது.