விமானப் பயணம் என்றாலே அமைதியையும், நிம்மதியையும் தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், திமாப்பூரில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த பயணிகள், நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ‘ஹவுசி’ (Housie) விளையாடத் தொடங்கியுள்ளனர்.
சத்தமாக எண்களைச் சொல்லிக் கூச்சலிடுவது, கைதட்டிச் சிரிப்பது என அந்த இடத்தையே ஒரு வீட்டின் வரவேற்பறை போல மாற்றிவிட்டனர். இதனால் சக பயணிகள் கடும் எரிச்சலடைந்த நிலையில், இது தொடர்பான வீடியோ எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது.
35,000 Feet Up — Ground-Level Civic Sense
by
u/Hour-Let5768 in
indianaviation
“35 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறோம், ஆனால் நாகரீகம் மட்டும் சுத்தமாக இல்லை” எனப் பதிவிட்டுள்ள ஒரு பயணி, “படிப்பும் பட்டமும் மட்டும் ஒருவனை மனிதனாக்காது, பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவதே உண்மையான கல்வி” எனச் சாடியுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவோருக்கு விமான நிறுவனங்கள் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் எனத் தங்களது ஆத்திரத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
