ஐதராபாத்தில் 38 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர் பின்னின்தி விஜய சாந்தி ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது குழந்தைகளான சேதனா ரெட்டி மற்றும் விஷால் ரெட்டி ஆகியோருடன் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவை அவரை இத்தகைய நிலைக்குத் தள்ளியதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு மென்பொருள் பொறியாளர் தனது குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வு, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களின் மனநலம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிச்சுமை குறித்த விவாதங்களை மீண்டும் முன்னெடுத்துள்ளது.
