இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் குறித்துப் பல நேரங்களில் எதிர்மறையான கருத்துக்கள் எழுவதுண்டு. ஆனால், பிரான் (Fran) என்ற வெளிநாட்டுப் பயணிக்கு இந்திய ரயில் பயணம் ஒரு மறக்க முடியாத ‘விருந்து’ அனுபவமாக மாறியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், ரயிலில் தனக்கு வழங்கப்பட்ட முழு உணவைக் கண்டு வியந்து போயுள்ளார்.

“இந்திய ரயிலில் இப்படி ஒரு சாப்பாடு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று கூறும் பிரான், தட்டில் இருந்த சாதம், பருப்பு, மட்டர் பன்னீர், ரொட்டி, ஊறுகாய், தயிர் மற்றும் இனிப்பு வகையாக ரசமலாய் ஆகியவற்றைக் காட்டி சிலாகித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Fran | Travel & Hidden Spots 🌍 (@fran.goes.places)

குறிப்பாக, பன்னீரை சிக்கன் என்று தவறாக நினைத்த அவருக்கு, இணையவாசிகள் அது ‘காட்டேஜ் சீஸ்’ என்று திருத்தம் செய்துள்ளனர். “இந்தியாவில் நீங்கள் ஒருபோதும் பசியோடு உறங்க மாட்டீர்கள்” என்று பெருமையுடன் கமெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள், இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். சுத்தமான பேக்கிங் மற்றும் சுவையான உணவு என இந்திய ரயில்வேயின் இந்த புதிய முகம் உலகப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.