எல்லைகளைத் தாண்டி இந்தியா வந்து இந்தியக் காதலன் சச்சின் மீனாவை மணம் முடித்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், தற்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று அவருக்கு சுகப்பிரசவம் நடந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது சீமா ஹைதரின் 6-வது குழந்தையாகும். பாகிஸ்தானில் உள்ள அவரது முதல் கணவர் மூலம் ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், சச்சின் மீனாவுடன் அவருக்குப் பிறக்கும் இரண்டாவது குழந்தை இது. கடந்த 11 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.
தற்போது தாயும் சேயும் நலமாக வீடு திரும்பிய நிலையில், ரபுபுராவில் உள்ள அவர்களது இல்லத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
2019-ல் பப்ஜி மூலம் தொடங்கிய இவர்களது காதல் கதை, சட்டவிரோதக் குடியேற்றம், கைது, ஜாமீன் எனப் பல திருப்பங்களைத் தாண்டி இன்றும் தேசமே உற்று நோக்கும் ஒரு பேசுபொருளாகவே நீடிக்கிறது.
