போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்ற பேருந்து ஓட்டுநரின் அராஜகத்தால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் நிலைகுலைந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அசுர வேகத்தில் வந்த AMTS (Ahmedabad Municipal Transport Service) பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.
Ahmedabad
CCTV footage of accident near Gota Ceramic Market surfaces An AMTS bus driver rammed into three vehicles, causing a serious road accident. The bus hit a school van, an auto-rickshaw, and a tempo with significant force. In the crash, two people were injured.… pic.twitter.com/rDTjVW5Bky— NextMinute News (@nextminutenews7) January 23, 2026
இந்த விபத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது.
இதற்காக அந்தப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் இது போன்ற ஓட்டுநர்கள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
