அவத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு அழுகிய உருளைக்கிழங்கு மற்றும் முட்டைகள் வழங்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ரயில் நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா மற்றும் பீகார் இடையே இயங்கும் இந்த ரயிலின் சமையல் கூடத்தில் (Pantry Car) மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், தரம் குறைந்த மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய உருளைக்கிழங்கு, தரமற்ற போஹா, பருப்பு உள்ளிட்ட பொருட்களைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பயணிகளின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இருந்த அந்த உணவுப் பொருட்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, தண்டவாளம் அருகே கொட்டி அழிக்கப்பட்டன. இந்த அலட்சியத்திற்காக சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு கடும் அபராதம் விதித்த ரயில்வே நிர்வாகம், இனி இது போன்ற தவறுகள் நடந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.