சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் (Amusement Park) மக்கள் ராட்சத ஊஞ்சல் ஒன்றில் அமர்ந்து உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஊஞ்சல் மிக வேகமாக சுழன்று ஒரு கட்டத்தில் அப்படியே தலைகீழாக மாறுகிறது.

அப்போது ஊஞ்சலில் அமர்ந்திருந்தவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மற்றும் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன்கள் அனைத்தும் வரிசையாக கீழே விழத் தொடங்கின.

மக்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக இருந்தாலும், அவர்களின் செல்போன்கள் மற்றும் உடைமைகளை கையில் வைத்திருந்தது இந்த விபரீதத்திற்கு காரணமாக அமைந்தது.