சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தின் மிக அருகில் நின்று கொண்டிருக்கிறார்.
அவர் ரயில் வருவதற்காகவே காத்திருப்பது அவரது நடவடிக்கைகளில் தெரிகிறது. ரயில் மிக அருகில் வருவதைப் பார்த்த அந்த வாலிபர், திடீரென தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
Salute to the police officer 🫡 pic.twitter.com/fa2vDuaBRK
— .. (@Superoverr) February 5, 2026
அப்போது அங்கே பணியில் இருந்த போலீஸ்காரர், நொடிப் பொழுதும் தாமதிக்காமல் பாய்ந்து வந்து அந்த வாலிபரைத் தள்ளிவிட்டு, ரயிலுக்கு மிக அருகில் இருந்து அவரைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தார்.
அந்த போலீஸ்காரர் மட்டும் இன்னும் 3 விநாடிகள் தாமதித்திருந்தால், அந்த இளைஞரின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இவர்தான் உண்மையான ஹீரோ” என்றும், “தன்னுடைய உயிரைப் பற்றி கவலைப்படாமல் பிறர் உயிரைக் காப்பாற்றிய இவருக்கு உயரிய விருது வழங்க வேண்டும்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
