அரியலூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, பட்டா மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்வதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து வசதிகளையும் கொண்ட இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொதுமக்கள் http://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதனை அடுத்து பட்டா மாறுதல் மனுவின் நிலை குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள https://eservices.tn.gov.in/eservicesnew/log/Appstatus.html/ என்ற இணையத்தை பயன்படுத்தலாம். மேலும் பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, அ-பதிவேடு ஆகியவற்றை இணையவழி சேவையில் கட்டணம் இன்றி பார்வையிட்டு https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறியுள்ளார்.