திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வருடம் தோறும் திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் கோழி காய்ச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில்  நேற்று தொடங்கிய இந்த முகாம் வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் நடக்கும் இந்த முகவில் ஆர்.டி.வி.கே தடுப்பூசி மருந்து ரூ.1,632 லட்சம் டோஸ்கள்  செலுத்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் கோழி வளர்ப்பவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.