பள்ளிக் கூடத்திற்குச் செல்லும் வழியில் ஒரு ஆசிரியை கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ, இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தான் நீண்ட நாட்களாகப் பள்ளியில் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும், பாலின பாகுபாட்டை (Gender Discrimination) சந்திப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“வேலை கிடைக்காது என்ற பயத்தில் அமைதியாக இருப்பது தவறு செய்பவர்களுக்குச் சாதகமாகிவிடும்; அதனால்தான் இன்று எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கப் போகிறேன்” என்று அவர் ஆவேசமாகப் பேசியது பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
View this post on Instagram
பள்ளி நிர்வாகம் தனது உடைகளைப் பற்றியும், தோற்றத்தைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசுவதாக அந்த ஆசிரியை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
“அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, பேருந்து நிலையத்தில் காத்திருந்து, இருக்கை கூட இல்லாமல் நின்று கொண்டே பள்ளிக்கு வருகிறேன். ஆனால் அங்கு எனக்குக் கிடைப்பது அவமானங்கள் மட்டுமே” என்று அவர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
@lifeofswa என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ள நிலையில், “இன்று பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்” எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
