இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இனிமேல் வலைப்பயிற்சியாக இருந்தாலும் சரி, மைதானமாக இருந்தாலும் சரி, ஹெல்மெட் அணியாமல் பேட்டிங் செய்யவே மாட்டேன் என ஒரு அதிரடியான சபதத்தை எடுத்துள்ளார்.
கடந்த வாரம் அகாடமி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பந்து அவரது முகத்தில் பலமாகத் தாக்கியது. இதில் அவரது வலது கண் மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழிந்ததோடு முகம் வீங்கிப்போனது.
I never understood the no helmet when spin is bowling , tbf I used to have throw downs with no helmet 🤦♂️
After my accident last week and getting seriously lucky with the outcome I’ll never not wear a helmet , cricket balls do serious damage !!!!
— Ben Stokes (@benstokes38) February 15, 2026
இது தொடர்பான அறுவை சிகிச்சை முடிந்து தற்போது குணமாகி வரும் ஸ்டோக்ஸ், “சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசும் போது கூட ஹெல்மெட் அணியாமல் விளையாடுபவர்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை;
கிரிக்கெட் பந்துகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவை” என மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். தனது காயத்தின் கோரமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், அதிர்ஷ்டவசமாகப் பெரிய விபத்திலிருந்து தப்பித்ததாகவும், பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது எவ்வளவு அவசியம் என்பதையும் சக வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
