டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் இந்தியா – பாகிஸ்தான் மெகா போட்டியில், இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி வெளியேறியது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, முகமது அமீர் உள்ளிட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அபிஷேக் ஷர்மாவை “வெறும் ஸ்லாகர்” என்று விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா வீசிய முதல் ஓவரிலேயே அவர் வீழ்ந்தது இந்திய அணிக்குத் தொடக்கத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது.

வயிற்று உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அபிஷேக், உடல்நலம் தேறி இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டார்.

ஆனால், பாகிஸ்தான் விரித்த சுழற்பந்து வீச்சு வலையில் சிக்கி 4 பந்துகளில் ஆட்டமிழந்தார். இந்த உலகக்கோப்பையில் அவர் எடுக்கும் இரண்டாவது ‘டக் அவுட்’ இது என்பதால், சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.